ஆற்றல் ஃபவுண்டேஷன் என்பது ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும்
இது திரு.ஆற்றல் அசோக் குமார் அவர்களால் நிறுவப்பட்டது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அதில் அடங்கியுள்ள உறுப்பினர்களை சார்ந்து மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்கும் அவ்வளர்ச்சியில் சமபங்கு உள்ளது என்னும் கொள்கையை அவர் உறுதியாக நம்புகிறார்.
அரசு மற்றும் சி.எஸ்.ஆர் திட்டங்கள் வாயிலாக தமிழகத்தை மேம்படுத்துவதற்காகவும், பல வளர்ச்சிகளை உருவாக்குவதற்காகவும் எங்களோடு இணைந்து பணியாற்ற பிற இயக்கங்களை ஊக்குவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
திறமையான அர்ப்பணிப்புள்ள குழுநபர்களோடு இணைந்து, மக்களின் தேவைகளையும், குறைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்திடவும், கடமையாற்றிடவும் நாங்கள் உங்களோடு கைகோர்த்திருக்கின்றோம்.