எங்களை பற்றி

திரு. ஆற்றல் அசோக் குமார் - செயலாக்க தலைவர்

ஆற்றல் அசோக் குமார் பற்றி:

ஆற்றல் அசோக் குமார் [பிறப்பு ஜூன் 5, 1970)

ஆற்றல் அசோக் குமார் தொலைநோக்கு கொள்கை மற்றும் சித்தாந்தம் கொண்டவர். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன், சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட ஒரு வெற்றிகரமான தலைவராக வளர்ந்துள்ளார். நல்லதொரு வருங்காலத்தை உருவாக்கும் முயற்சிகளை பாராட்டும் விதமாக ஃபோர்ப்ஸ் இந்தியா 2020 ஆம் ஆண்டிற்கான ‘ஹை பர்ஃபாமிங் ஹூமன் அசட்” என்ற விருதை அவருக்கு வழங்கியது. “ஒரு குழந்தையின் சிந்தனை எங்கு பிறக்கிறதோ அங்கு பள்ளி பிறக்க வேண்டும்”, என்ற எண்ணமே இவரை அடுத்த தலைமுறையின் நலனுக்காக பாடுபட வைக்கிறது. அவர் கடந்த 15 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் (TIPS – The Indian Public School) மற்றும் கல்லூரிகளை நமது நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிறுவி நிர்வகித்து வருகிறார்.

அசோக்கின் முயற்சிகள் விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவை: TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளி விருதுகள் 2017, 2018, 2019, 2020, 2021; கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தால் 2020 ஆம் ஆண்டின் Edupreneur விருது. புது தில்லி: கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தால் 2021 ஆம் ஆண்டின் Visionary Leader விருது, புது தில்லி: சாதனையாளர் மன்றத்தால் 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய சாதனையாளர் விருது; 2006 ஆம் ஆண்டுக்கான 44 “சிறந்த ஃபவுண்டரி” க்கான லக்ஷ்மண் ராவ் கிர்லோஸ்கர் விருது, இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபவுண்டரி-யால் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி புது தில்லியில் நடந்த 55 வது இந்திய ஃபவுண்டரி காங்கிரஸில் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை & குடும்பம்

ஆற்றல் அசோக் குமார் 1970 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பிறந்த கொங்கு மண்ணின் மைந்தன். பேராசிரியர் ஆர்.ஆறுமுகம் மற்றும் திருமதி சௌந்தரம்.கே.எஸ் அவர்களின் மகன். இவரது தந்தை அரசு கலைக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் மற்றும் தாய் கொங்குநாடு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து பின்னர் திருச்செங்கோடு தொகுதியின் (இன்றைய ஈரோடு தொகுதி) பாராளுமன்ற உறுப்பினராக 1991- இல் பதவியேற்றார்.

ஆற்றல் அசோக், கருணாம்பிகா குமாரை மணந்தார் (டாக்டர் சி. சரஸ்வதியின் மகள், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், மொடக்குறிச்சி தொகுதி (2021), ஈரோடு மாவட்டம்). இவர்களுக்கு இரண்டு மகன்கள் (அஷ்வின் குமார் மற்றும் நிதின் குமார்). கணவர், அன்பான தந்தை மற்றும் வெற்றிகரமான தலைவரான அசோக் மிகவும் தேவையான மாற்றத்தைக் கல்வித் துறையில் செய்யும் பொருட்டு சிறந்த கல்வியை வழங்கி வருகிறார்.

பணி அனுபவம்:

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், அமெரிக்கா – பிராந்திய விற்பனை மேலாளர் – 2001-2004

இன்டெல் கார்ப்பரேஷன், அமெரிக்கா – வணிக மேம்பாட்டு மேலாளர் – 1996-2001

ஜெராக்ஸ் கார்ப்பரேஷன், அமெரிக்கா – தொழில்நுட்ப விற்பனை ஆய்வாளர் – 1992-1996

கல்வி தகுதி

அசோக், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். பின்னர் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1987-1991 வருடத்தில் மின் பொறியியல் (B.E) பயின்று நல்ல மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார் (பாரதியார் பல்கலைக்கழகம்].

ஆற்றல் அசோக் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மின் மற்றும் கணினி பொறியியல் (M.S.) பட்டம் பெற்றார் (1991-1992).

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (M.B.A.) பெற்றார் (1994-1996).

வணிக அனுபவம்:

நிறுவனர்ஆற்றல் அறக்கட்டளை – 2021

ஆற்றல் அறக்கட்டளை என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், ‘மக்கள் நலனே எங்களுடைய நலன்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. நமது சமூகத்தின் வளர்ச்சியில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்று அசோக் உறுதியாக நம்புகிறார், ஆற்றல் அறக்கட்டளை அதை நோக்கிச் செயல்படத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு, நாமக்கல், திருச்சி, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் பிற தகவல்களைச் சேகரித்து அவற்றின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற சமூகத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறது.

  • ஸ்தாபக உறுப்பினர் மற்றும் இயக்குனர் – குளோப்எடுகேட் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ்
  • நிறுவனர் மற்றும் தலைவர் – டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 2018
  • நிறுவனர் மற்றும் தலைவர் – டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் – 2018
  • நிறுவனர் மற்றும் தலைவர் – டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் – 2018
  • நிறுவனர் மற்றும் தலைவர் – தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட் – 2012
  • நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் – தி இந்தியன் பப்ளிக் பள்ளி குழுமம் – 2016
  • நிறுவனர்அமெக்ஸ் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் – 2004

நிறுவன உறுப்பினர் மற்றும் இயக்குனர்குளோப்எடுகேட் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ்

குளோப்எடுகேட் இன்றைய இளைஞர்களை நாளைய உலக குடிமக்களாகத் தயார் செய்யும் முற்போக்கான உலகளாவிய கல்விக் குழுவாகும். இந்த மாணவர்களால் நாளைய உலகம் வடிவமைக்கப்படும். முற்போக்கான மற்றும் புதுமையான சிந்தனைகள் மூலம் ஒரு மாணவன் தனது குழந்தை பருவம் முதல், பட்டப்படிப்பு வரை சிறந்த கல்வி வழங்குவதில் முன்னோடியாக குளோபல்எடுகேட் நிறுவனம் விளங்குகிறது.

நிறுவனர்டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 2018

டிப்ஸ்காஸ் – டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ளது. TIPSCAS கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . பல்வேறு 3 ஆண்டு பட்டப்படிப்புகள் [B.Sc / B.Com / B.B.A] TIPSCAS இல் வழங்கப்படுகிறது. இக்கல்லூரி 5 ஏக்கர் பரப்பளவில் பசுமையான பகுதிகள் மற்றும் 2000 மரங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பில் ஆய்வக வசதிகள், ஒரு திறந்த ஆம்பிதியேட்டர் தியேட்டர், கற்றல் வள மையம் (நூலகம்), கூடைப்பந்து மற்றும் ஷட்டில் கோர்ட்டுகள் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள், உணவருந்தும் பகுதி, சிற்றுண்டிச்சாலை மற்றும் 3 நட்சத்திர தரநிலையான தங்குமிடம் மற்றும் உணவருந்தும் வசதிகள் ஆகியவை அடங்கும்.

நிறுவனர்டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் – 2018

டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் 2 வருட MBA பட்டப்படிப்பை வழங்குகிறது (AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்டது, புது தில்லி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, சென்னை (நிறுவனக் குறியீடு : 717), நிறுவனங்களின் இடைநிலை மேலாளர்கள் தேவையை பூர்த்தி செய்கிறது, இவர்கள் இந்தியாவில் பணிபுரியும் நிறுவனங்களை வளர்க்கவும் மேம்படுத்தவும் தேவைப்படும் தகுதி கொண்டு விளங்குகிறார்கள்.

நிறுவனர்டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் – 2018

டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் என்பது ஆர்வமுள்ள மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களுடன் கட்டிடக்கலையின் முற்போக்கான வடிவமைப்புகளை ஆராயும் ஆய்வகமாகும். இந்த துறை, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள், அழகியல், கட்டுமான தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் எதிர்கால கட்டிடக்கலை நடைமுறை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். கட்டிடக் கலைஞர்கள் தங்கள் வடிவமைப்புத் திறனை விரிவுபடுத்தவும் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு, இயற்கை வடிவமைப்பு, உள்துறை வடிவமைப்பு, தளபாடங்கள் வடிவமைப்பு, கட்டிடக்கலை இதழியல், புகைப்படம் எடுத்தல் மற்றும் செட் டிசைன் உட்பட தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவமும் பெறலாம். இத்துறையில் வேறுபட்ட மற்றும் வரம்பற்ற தொழில் வாய்ப்புகள் உள்ளன.

நிறுவனர்தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட் – 2012

டிப்ஸ் குளோபல் தனித்துவமான சேவையை வழங்குகிறது – டிப்ஸ் குளோபல் நிறுவனம், டிப்ஸ் குழுமத்தின் முதன்மை உயர்கல்வி பிரிவு, பல இலக்கு சார்ந்த படிப்புகளை வழங்குகிறது. இண்டஸ்ட்ரி ரெடி ப்ரொஃபஷனல்ஸ், ஸ்டடி ப்ரோக்ராம் ஆகியவற்றின் தொழில் தேவையை அறிந்து மாணவர்களை சர்வதேச கல்வித் தகுதி மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராக அல்லது Intrapreneurs-ஆக மாற்றுகிறது. இந்நிறுவனத்தின் நோக்கு முக்கிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது, அவை, கற்பித்தல் மற்றும் கற்றலில் புதுமை, உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்பு & படைப்பாற்றல் மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பை உருவாக்குதல். டிப்ஸ் குளோபல் இளம் மனதை மெருகேற்றி பொறுப்பான தலைவர்களை வளர்த்தெடுக்கும் தனித்துவமான இடமாகும்.

நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்தி இந்தியன் பப்ளிக் பள்ளி – 2006

ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கும் தத்துவம் கொண்டு, குழந்தைகளை மையமாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இவர் ‘டிப்ஸ்’ ஐ நிறுவினார். தற்போது இந்த நிறுவனம் பல மாநிலங்களில் உள்ள பல வளாகங்களின் மூலம் உலகளாவிய கற்றல் சூழலை 12,000 மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல் IB வேர்ல்ட் பள்ளியைக் கொண்டுவருவதில் ஊக்கியாக இருந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் ‘டிப்ஸ்’, குழந்தை மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டிற்கான சர்வதேச மையமாகச் சான்றளிக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். K-12 – யிலிருந்த திட்டங்களின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

நிறுவனர்அமெக்ஸ் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் – 2004

அமெக்ஸ் தனது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உயர்தர வார்ப்புகளைத் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த பணிக்காகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (சூரிய மற்றும் காற்று) பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என்பதை அறிந்து நிபுணர்களுடன் இணைந்து பணிபுரிகின்றனர்.