ஆற்றல் உணவகம்


ஆற்றல் உணவகம் மூலம் மிகக்குறைந்த விலையான ரூ.10க்கு மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது. தற்போது ஈரோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் ஆற்றல் உணவகம் செயல்பட்டு வருகிறது. மாதம் 1,00,000க்கும் அதிகமான மக்கள் ஆற்றல் உணவகத்தால் பயனடைந்து வருகின்றனர்.

 

நான் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி தினமும் வெளியில் சாப்பிட்டால் எனக்கு குறைந்தது 150 ரூபாய் செலவாகும் இங்கு பத்து ரூபாய்க்கு உணவு கிடைப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் வயிறார உணவையும் உண்கிறேன் பணத்தையும் சேமிக்கிறேன்.

 

நான் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்கிறேன். தினமும் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதனால் உடல்நிலை கோளாறுகள் ஏற்படுகிறது. இங்கு பத்து ரூபாய்க்கு வீட்டில் சமைக்கும் உணவு போன்று கிடைக்கிறது இந்த சிறந்த சமூக சேவைக்கு திரு .ஆற்றல் அசோக் குமார் அவர்களுக்கு நன்றி.