எங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு
ஆற்றல் ஃபவுண்டேஷன் என்பது ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும்
இது திரு.ஆற்றல் அசோக் குமார் அவர்களால் நிறுவப்பட்டது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அதில் அடங்கியுள்ள உறுப்பினர்களை சார்ந்து மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்கும் அவ்வளர்ச்சியில் சமபங்கு உள்ளது என்னும் கொள்கையை அவர் உறுதியாக நம்புகிறார்.
குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது அடுத்த தலைமுறையை வடிவமைத்து நம்மிடையே தலைவர்களை உருவாக்குகிறது. கிராமப்புறக் கல்வியில் பின்வரும் பகுதிகளை மேம்படுத்த விரிவான முறையில் பணியாற்றுகிறோம்.
1. உணவு மற்றும் ஊட்டச்சத்து
2. அடிப்படை உட்கட்டமைப்பு
3. அடிப்படை சுகாதாரம்
4. கல்வி வழிகாட்டுதல்
இதுவரை, கூட்டாக எங்கள் குழு கடந்த ஆண்டில் இருந்து ஐந்து மாவட்டங்களில் 1,00,000 கிமீ தொலைவைக் கடந்து நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்குச் சென்றுள்ளது. மற்றும், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எங்களுடைய பள்ளி மேம்பாட்டு பணிகள் பல கட்டங்களாக 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விரிவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் மூலம் சிறந்த மதிய உணவு வசதிகள், சிறந்த சுற்றுப்புறத்துடன் கூடிய வகுப்பறைகள், செயல்பாட்டு கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகள் சீரமைக்கப்பட்டு தற்போது 15000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பயன்னடைந்து உள்ளனர்.